April 20, 2024

பிரான்சில் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் இது மிகவும் அவசியம்!

பிரான்சில் வரும் ஜுன் மாதம் 2-ஆம் திகதிக்கு பின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம் என்று அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பு செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இருப்பினும் வரும் ஜுன் 2-ஆம் திகதிக்கு பின் நாட்டில் கொரோனா ஊரடங்கின் பல்வேறு விதிகள் தளர்த்தப்படுகிறது.

இந்நிலையில், ஊரடங்கு வெளியேற்றத்தின் இரண்டாம் கட்ட நடைமுறை நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டாலும், தண்டவாளங்களில் ஓடும் பொதுப் போக்குவரத்துக்களில் (RER, Train, Metro) காலை உள்ளூர் நேரப்படி 6.30 முதல் 9.30-க்கு இடையிலும், மாலை 16.00 மணியில் இருந்து 19.00 வரையிலும் பயணிப்பவர்கள் வழக்கம் போல் கட்டாயமாக வேலை செய்யும் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் (attestation employeur) வைத்திருத்தல் அவசியம் என்று, அரசாங்கத்தின் போக்குவரத்துக்களிற்குப் பொறுப்பான செயலாளர் ஜோன்-பப்திஸ்த் ஜெபாரி அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொடர்ந்தும் பொதுப் போக்குவரத்துக்களில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் எனவும், தொடருந்து நிலையங்களில், காவல்துறையினர், வேலை செய்யும் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,