September 9, 2024

பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்! இருவர் பலி! ஐவர் படுகாயம்!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர்
படுகாயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு அமைச்சர் மந்திரி கிறிஸ்டோஃப் காஸ்டனர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கிரெனோபிலுக்கு அருகிலுள்ள ரோமானிய-சுர்-இசெரே நகரில் ரபாக் (tabac புகையிலை, வெண்சுருட்டு, சுருட்டு, பத்திரிகைகள், சஞ்சிகைகள், அதிஸ்ட இலாபச் சீட்டை விற்கும் கடை) கடைக்குள் நுழைந்த தாக்குதலாலி அங்கிருந்து கடை உரிமையாளர் மற்றும் வாடிக்கையாளரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன் மற்மொரு கடையில் மேலும் பலரைக் கத்தியால் குத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய சூடான் நாட்சைச் சேர்ந்த அகதி எனவும் அவரைக் கைது செய்யும் போது நடைபாதையில் முழங்காலில் இருந்தவாறு அரபு மொழியில் பிரார்த்தனை செய்தால் என அரச சட்டத்தரணி தகவல் வெளியிட்டுள்ளார்.

தாக்குதலாளியைக் கைது செய்யும் போது தாக்குதலாளி தன்னை சுட்டுக்கொல்லுமாறு கேட்டுக்கொண்டதாக தேசிய காவல்துறைச் சேர்ந்த டேவிட் ஆலிவர் ரெவர்டி கூறியுள்ளார்.