Oktober 7, 2024

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பூண்டு கஞ்சி!!

பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் இருக்காது என்பதே பலரும் அறிந்த விஷயமாகும். ஆனால் பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக் கூடியதாகும். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட முடியாதவர்கள் இந்த பூண்டு கஞ்சியை செய்து குடியுங்கள்.

  • சிவப்பு அரிசி – ஒரு கப்
  • தேங்காய்ப் பால் – 11/2 கப்
  • பூண்டு – 15 பல்
  • சீரகம்- 1 டீஸ்பூன்
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • சுக்கு – 1 துண்டு
  • உப்பு – தேவையான அளவு.

  1. சிவப்பரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து அலசிக் கொள்ளவும்.
  2. அடுத்து குக்கரில் அரிசியுடன் ¾ கப் தேங்காய்ப் பால், தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  3. அடுத்து மீதமுள்ள ¾ கப் தேங்காய்ப் பாலை சேர்க்கவும்.
  4. இப்போது பூண்டு கஞ்சி ரெடி.