Mai 18, 2024

முன்னாள் அரசியல் கைதி உடலம் மீட்பு!

தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த மாதம் விபத்தில் காயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  தெட்சணாமூர்த்தி கோபிதாஸ் என்பவரையே நீண்ட சிரமத்தின் பி;ன்னராக ரவிராஜ் சசிகலா கண்டறிந்து வழங்கியுள்ளார்.

இதனிடையே அவரது குடும்பத்தினரை இன்று சந்தித்த சசிகலா ரவிராஜ், மாமனிதர் இரவிராஜ் ஞாபகார்த்த மன்றத்தின் சார்பிலும் தொழிலதிபர் சிறி இராசமாணிக்கம் சார்பிலும் உதவிகளை கையளித்துள்ளார்.

தெட்சணாமூர்த்தி கோபிதாஸ்  சிறுவயதில் தாயை இழந்தவர். சகோதரர் ஒரு மாவீரர். 2007 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட கோபிதாஸ், சிறையில் இருந்து 2019 ம் ஆண்டே விடுதலையானவர் தடுப்பில் இருந்த போது கொடிய சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்.

கடந்த நவம்பர் மாதம் முதல் வாரம்  பாணந்துறையில் விபத்தொன்றில் படுகாயமடைந்து பாணந்துறை  வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  ஆயினும் டிசம்பர் மாதம் 20 ம் திகதி மீண்டும் பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு  சிகிச்சை பலனின்றி டிசம்பர் மாதம் 24ம் திகதி உயிரிழந்தார்.

இந்நிலையில் 20ம் திகதி முதல் தகவலற்று போயிருந்த அவரது நிலையினை கண்டறிய சசிகலா ரவிராஜ் உதவியிருந்தார்.

நேற்று, அவரது உடல் பாணந்துறை வைத்திய சாலையிலிருந்து அவரது சொந்த இடமான முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விநாயகபுரம் துணுக்காய்க்கு எடுத்துச் செல்லப்பட்டது.