Mai 2, 2024

பெலரூசுக்கு அனுப்ப பொலிஸ் ரிசர்வ் படை தயார்! புடின் அறிவிப்பு!

தேவைப்பட்டால் பெலரூஸில் தலையிட ஒரு போலீஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுயுள்ளார்.ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் பெலரூஸில் தலையிட ஒரு போலீஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளோம். ஆனால் அந்த நிலை இன்னும் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.

பெலரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஒரு குறிப்பிட்ட போலீஸ் ரிசர்வ் படையை அமைக்கும்படி என்னிடம் கேட்டிருந்தார். அதற்கு அமைய நான் ஒரு பொலிஸ் ரிசர்வ் படையை உருவாக்கியுள்ளேன்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறும் வரையில் அது பயன்படுத்தப்படமாட்டாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

1989 ஆண்டு யு.எஸ்.எஸ்.ஆர் உடைந்து தனித்தனி நாடுகளாக மாறிபோது  அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபரானார். அன்றிலிருந்து அவரே தொடர்ச்சியாக அதிபராக இருக்கின்றார்.