April 16, 2024

1,100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்கப்புதையலை கண்டுபிடித்த இளைஞர்!

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் பல நாட்களாக ஆராய்ச்சி நடைபெற்று வந்தன.

இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக்கொண்டு அப்பகுதியில் புதைத்திருந்த படிமங்களை தோண்டி பரிசோதனை செய்து வந்தனர்.

இந்நிலையில், தன்னார்வலர்களில் ஒருவரான ஹொஹின் என்ற இளைஞர் அப்பகுதியில் உள்ள மண்ணை தோண்டி ஆய்வு செய்துகொண்டிருந்தபோது அவரருக்கு தங்கப்புதையல் கிடைத்தது.

அந்த இளைஞர் கண்டுபிடித்த புதையலில் மொத்தம் 425 தங்க நாணயங்கள் இருந்தன. இந்த நாணையங்கள் அனைத்து 24 கேரட் தூயதங்கம்

என தெரியவந்துள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 845 கிராம் ஆகும். இந்த தங்கம் 1,100 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் இஸ்ரேல், பாலஸ்தீன்ம், சிரியா, ஜோர்டான் போன்ற பல்வேறு நாடுகளை ஆட்சி செய்த அபாசித் ஹலிப்ஹேட் என்ற இஸ்லாமிய மன்னரின் காலத்தை சேர்ந்தாக இருக்கலாம் என இஸ்ரேல் தொல்லியல் துறை தெரிவித்துள்ளனர்.

இந்த தங்கப்புதையலையடுத்து அப்பகுதியில் தற்காலிக குடில்கள் அமைத்து இஸ்ரேல் தொல்லியல் துறையினர் ஆராய்ச்சியை துரிதப்படுத்தியுள்ளனர்.