நெடுந்தீவில் 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 3 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் புதன்கிழமை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , அத்துமீறி நுழைத்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். 

விசாரணைகளின் பின்னர் , கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக அவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர், 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert