April 26, 2024

வேஸ்டி கட்டிய சீனத் தூதுவர்; யாழ் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு!

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு இலங்கைக் கான சீனத் தூதுவர் சென்றுள்ளார்.

குறித்த நிகழ்வானது மிகவும் அரிதான மற்றும் குறிப்பிடத்தக்க விஜயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் வருடந்தோறும் வருகை தரும் வரலாற்று சிறப்புமிக்க நாலூர் கந்தனின் வழிபாட்டுத் தலத்துக்கு, சீனத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் விஜயம் செய்துள்ளமை விசேடமானதாகும்.

அதேவேளை தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஸ்டி கட்டி சீனதூதுவர் உள்ளிட்ட குழுவினர் நல்லூர் ஆலயத்திற்கு வழிபடச்சென்றிருந்தமை குறிபிடத்தக்கது.