Mai 1, 2024

கொரோனா சிகிச்சைக்காக மக்கள் செலவளித்த தொகையை திருப்பி கொடுங்கள் – அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

 

னைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் பொது மக்களிடம் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கக் கூடாது என புதுச்சேரி அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த உத்தரவை மீறி புதுச்சேரி அரியூரில் உள்ள வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளிடம் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

எனவே அரசு உத்தரவுப்படி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தனியார் மருத்துவமனை தரப்பில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வகையில் செலவான ரூ. 2.90 கோடியை வழங்குமாறு அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு தரப்பில், ‘‘இந்த பட்டியலை சரிபார்த்து அந்த தொகையை வழங்க அவகாசம் வேண்டும் என்பதால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்” என கோரினார். இதையடுத்து நீதிபதிகள், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு 3 மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்துனர்.