April 27, 2024

யாழில் தொடரும் வன்முறை – இன்றும் தாக்கப்பட்ட ஒருவர்

யாழ். மாநகரில் வர்த்தகர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நட்டபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 28 வயதுடைய வர்த்தகர் ஒருவர் வெட்டுக்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.