சுவிஸில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் தெரியுமா?

சுவிஸில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யார் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கையில் ஆப்பிரிக்க நாட்டவர்கள் முன் நிரையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக சுவிட்சர்லாந்தில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியலில் யூகோஸ்லாவியாவில் இருந்து வசிப்பவர்களே இடம்பெற்று வந்தாலும்,

தற்போது தென் மேற்கு ஆபிரிக்கர்கள், மேற்கு ஆபிரிக்கர்கள் மற்றும் வட ஆபிரிக்கர்கள் அதிகமாக சுவிஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனைக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.

பெடரல் புள்ளிவிவர அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, சுவிஸில் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பட்டியலில் துருக்கி மக்களே முன் வரிசையில் இருந்துள்ளனர்.

தற்போது 1000 பேர்களில் 9 பேர் என்ற எண்ணிக்கையில் துருக்கி மக்களின் குற்றச்செயல்கள் கட்டுக்குள் வந்துள்ளது.

அதேவேளை சுவிஸ் குடிமக்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் விகிதம் 2.5 என பதிவாகியுள்ளது.

மிகவும் குறைவாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பட்டியலில் கனேடியர்கள், ஸ்வீடன் மக்கள், ஐரிஷ் மற்றும் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2018-ல் போதை மருந்து வழக்கில் மட்டும் 900 மேற்கு ஆபிரிக்கர்கள் தண்டனை பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில் அல்பேனியர்கள் 500 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.