April 24, 2024

18. 10. 2020 நள்ளிரவு முதல் சுவிசில் நடைமுறைக்கு வரும் மகுடநுண்ணுயிரித் தடுப்பு நடவடிக்கைகள்

சுவிசின்நடுவனரசும் மாநில அரசுகளும் கடந்த வியாழக்கிழமை 15ம் திகதி இணைந்துநோய்த்தடுப்பு செயற்பாடுகள் தொடர்பாக பேசியிருந்தனர். மறுநாள் 16ம் திகதி மாநிலஅரசின் சுகாதாரத்துறை நிபுணர்களும் மத்திய அரசின் தொற்றுநோய்த் தடுப்பு சிறப்பு அதிகாரிகளும், அறிஞர்களும் கூடிப்பேசியிருந்தனர்.

18. 10. 2020 பேர்ன் மாநிலத்தில் சுவிசின் நடுவனர அமைச்சர்கள் சந்தித்துக்கொண்டு 18. 10. 2020 இரவு முதல் நடைமுறைக்குவரும் புதிய நடவடிக்கையினை அறிவித்துள்ளனர்.

கட்டாயமுகவுறை சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் பொதுப்போக்குவரத்து மட்டுமன்றி அனைத்துப் பொது வெளிகளிலும் கட்டடங்களுக்குள்ளும் அனைவரும் முகவுறை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தனியார்கொண்டாட்டங்கள் தனிமனிதர்கள்ஒன்றுகூடி விழாக்கள் கொண்டாடும்போது 15 மக்களுக்கு உட்பட்டு சிறப்பு காப்பமைவு ஏதும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. அதுவே 15 விருந்தினர்களுக்கு அதிகமாக மக்கள் பங்கெடுக்கும் தனிவிழாக்களிலும் அனைவரும் முகவுறை அணியவும், உணவு உண்ணும்போது கட்டாயமாக இருக்கைகளில் இருக்க வேண்டும் எனும் விதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருக்கும்போதுமட்டுமே முகவுறையினை அகற்ற அனுமதி அளிக்கப்படுகின்றது. நூற்றுக்குமேற்பட்ட விருந்தினர்கள் பங்கெடுக்கும் விழாக்களில் பாதுகாப்பு அமைவு எழுத்தில் இருக்க வேண்டும். நடுவனரசு அறிவித்துள்ள விதிகள் முழுமைப்படுத்தப்பட்ட காப்பமைவுடன் மட்டுமே விழாக்கள் கொண்டாடப்படலாம். அவ்விழாக்கள்பொது இடங்களில் மட்டுமே நடைபெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் ஒன்றுகூடுவதற்கு தடை பொதுஇடங்களில் உலாப்போகும்போது, பூங்காக்களில் பொழுதுபோக்கும் போது, அல்லது வேறு சந்திப்புக்களானாலும் ஆகக்கூடியது 15 நபர்களுக்குஉட்பட்டே ஒன்றுகூடலாம். அதற்கு மேற்பட்டு ஒன்றுகூடப் பொதுத்தடையினை சுவிஸ் நடுவன் அரசு அறிவித்துள்ளது. உரியமுறையில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வுகள், பேரணிகள், பொது ஒன்றுகூடல்கள் உரியபாதுகாப்புடனும் அனுமதியுடனும் ஆற்றப்படலாம். விருந்தோம்பல்துறை உணவகங்களில் முகவுறையினை உணவு உண்ணும்போது மட்டுமேஅகற்றலாம். உண்ணுவதும் அருந்துவதும் இருந்து மட்டுமே செய்யலாம்.

(18.10.2020) பொதுஊடகர் சந்திப்பின் சுருக்கம்:

நடுவனரசுவீடுகளில் இருந்து பணிசெய்ய முன்மொழிந்துள்ளது. இதன் விளக்கத்தினை சுகாதாரத்துறைஅமைச்சர் திரு பெர்சே இவ்வாறுவிளக்கினார். சுவிசில் வீடுகளில் இருந்து இணைய வழியில் பணிஆற்றக்கூடிய அனைவரையும் அவ்வாறு பணியாற்ற நாம் வேண்டுகின்றோம் என்றார். மேலும் அனைத்துப் பணிகளையும் வீடுகளில் இருந்து ஆற்ற முடியாது என்பதையும்நாம் அறிவோம். அப்படி முடியாதோர் உரிய பாதுகாப்புடன் பணியிடங்களில்பணியாற்றுங்கள் என்றார்.

பொதுஇடங்களில் தனிநபர்கள் 15 நபர்களுக்கு மேலாக ஒன்றுகூடத் தடை விதித்திருக்கும் சுவிஸ்அரசு பொது அமைப்புக்களுக்கும், தொழில் நிறுவனத்திற்கும் இத் தடையினை ஏன் விதிக்கவில்லை என்ற கேள்வியினை சுவிஸ் ஊடகங்கள் ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. பெர்சே அவர்களிடம் விடுத்தார். அதற்குப்பதில் அளித்த பெர்சே, பொது அமைப்புக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தமது பணியாளர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகாது காக்கும் ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கு துறைசார் அறிவுடன் நோய்த்தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் செயல்முறையும் தெரியும் ஆகவே, பொதுவெளியில் ஒன்றுகூட இது தனிநபர்களுக்கு மட்டும்விடுக்கப்பட்டுள்ள தடையாகும் என்றார்.

சுவிஸ்அரசின் புதிய நடிவக்கையினை மீறுவோர் மீது எவ்வகை நடவடிக்கை எடுக்கப்படும் என வினாவப்பட்டபோது நடுவனரசின் சுகாதரத்துறை அதிகாரி திரு. மிக்கெல் கெர்ப்பர் இவ்வாறு பதில் அளித்தார். முன்னர் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோது குற்றத்தண்டனைப் பணம் அறவிடப்பட்டது. இப்பொது நிகழ்வுகளை நடாத்துவோரே நிகழ்வுகளுக்குப் பொறுப்பும் வார்கள். அவர்கள் விதிமீறின் அவர்களே தண்டிக்கப்படுவர் என்றார்.

பாடசாலைகள் எவ்வாறு தொடரப்படும்?

இதற்குப்பதில் அளித்த சுகாதரத்துறை அமைச்சர் திரு. பெர்சே, இவை மாநிலங்களின் அதிகாரத்திற்குள்உள்ளது. மாநிலங்களின் முடிவின்படி பாடசாலை விதிகள் அமையும். நாம் எமது மாணவர்கள் வாய்ப்பிற்கமைய தடங்கலின்றி பாடசாலை செல்ல வேண்டும் என விரும்புகின்றோம் என்றார். மகுடநுண்ணுயிரி Covid 19 ஐயம் நோய்த்தொற்றினை நம்பாதோர், ஐயம் கொள்வோர் தொடர்பாக சுவிஸ் அரசு என்ன சொல்கின்றதுஎன்ற கேள்விக்கு பதில் அளித்த சுவிஸ் அதிபர், இந்நோயில் இருந்து மக்களைக் காக்க அற்பணிப்புடன் பணியாற்றும் அனைவரையும் நாம் மதிப்பளிக்கும் வேளை, இந்நோய் தொற்றுத் தொடர்பில் ஐயம்கொண்டு இன்று நாடாளுமன்றம் முன்னிலையில் ஒன்றுகூடியிருப்போர் கருத்தில் இருந்து வேறுபடுகின்றோம். எமது நோக்கம் மக்களைவலிகளில் இருந்து மீட்கவேண்டும் என்பது மட்டுமே என்றார். சுவிஸ்அரசின் ஒற்றுமை சுவிஸ்நடுவனரசின் 7 அமைச்சர்களும் உள்ளுக்குள் ஒற்றுமையாக முடிவுகளை எடுக்கின்றீர்களா என வினாவினார். இதற்குப்பதில் அளித்த சுவிஸ் அதிபர். நாம் ஆய்வுகள் செய்து. கூடிப்பேசிக் கலந்துரையாடி பொது முடிவுகளை எட்டுகின்றோம். எட்டப்படும் முடிவுகளை நாம் அனைவரும் ஒருநிரலில் பொறுப்பேற்கின்றோம் என்றார்.

தொழில்சாராத விளையாட்டுக்கள் தனிமனிதர்கள் பொழுதுபோக்காக நடாத்தும் விளையாட்டுப் பயிற்சிகளில் விதிகள் எவ்வாறு அமைகின்றது என வினாவப்பட்டபோது சுகாதாரஅதிகாரி திரு. மிக்கெல் கெர்பெர் பொது இடத்தில் விளையாட்டுப்பயிற்சிசெய்வோர் தொகையும் 15 மக்களுக்கு அதிகமாக கூடக் கூடாது என்றார். குழந்தைகள் இதற்குசுவிஸ் நடுவனரசின் சுகாதார அதிகாரி திரு. மிக்கெல் கெர்பெர் பதில் அளித்தார். 12வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் முகவுறை அணியவேண்டும் என்றார் சிறியவர்கள் தொடர்பாக உங்கள் முடிவு என்று வினாவப்பட்டது. சிறயவர்கள் முகவுறை அணியத் தேவையில்லை. ஆனால் அவர்களும் 15 நபர்களுக்கு மேலாக பொதுவெளியில் ஒன்றுகூடத் தடை உள்ளது என்றார்.

மேலும் விளையாட்டுப் பயிற்சி ஆனாலூம், யோகாசனப் பயிற்சி ஆனாலும் முகவுறை அணிய வேண்டும். சிலவிளையாட்டுக்களுக்கு அல்லது செயல்களுக்கு விதிவிலக்கும் உண்டு என விளக்கினார். எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது கொறோனா அலை வந்துவிட்டதா? சுகாதாரஅமைச்சர் பெர்சே இதற்கு பதிலளிக்கையில், இரண்டாவது அலை எப்படி இருக்கும்என்ற கேள்வி இருந்துவந்தது. இன்று ஆம் இதுதான் நாம்எதிர்பார்த்த இரண்டாவது அலை என விழிக்கலாம். நாம் எதிர்பார்த்ததை விட வேகமாகவும் கடுமையாகவும்இது வந்துள்ளது. ஆனாலும் நாம் இதற்கும் எம்மைத்தயார்படுத்தி உள்ளோம் என்றார். பொதுப்போக்குவரத்திற்குசுவிஸ் அரசு மானியம் அளித்து உதவ எண்ணியுள்ளதா? சுவிஸ்அதிபர் இக்கூற்றினை மறுத்துரைத்தார். மேலும் மக்களை நோய்த் தொற்றில் இருந்து காக்கும் நோக்கமே இன்று எம்முன் உள்ள முதன்மை நோக்கமாகஉள்ளது. பொருளாதாரத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதோ அல்லது வேறு நோக்கோ எம்மிடமில்லை. இன்றைய இச் செயல் நடவடிக்கைகள்மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பதாகும் என்றார்.

இதனைவிடவும் கடுமையான நடவடிக்கையினை சுவிஸ் அரசு மேற்கொள்ளுமா?

சுவிஸ்அதிபர் பதிலளிக்கையில் இன்றைய இச்சந்திப்பின்நோக்கம் இதுவல்ல என்றார். மேலும் மாநில அரசுகளையும் நடுவனரசினையும் ஒருவருக்கொருவர் நடவடிக்கைகளை எடுக்க தூண்டிவிடுவதும் அல்ல. நாம் தொடர்ந்தும் அனைத்து மாநிலங்களுடன் தொடர்பில் இருப்போம் என்றார். ஏன்பெரும் பொதுநிகழ்வுகளைத் தடைசெய்யவில்லை? சுவிஸ்அதிபர் திருமதி சிமொநெற்ரா சொமறுக்கா இதற்குப் பதில் அளித்தார்.

இது தொடர்பில் நாம்மாநிலங்களுடன் ஆழமாக ஆய்வு செய்திருந்தோம். மாநிலஅரசுகளே பெரு நிகழ்வுக்கு அனுமதி அளிக்கும் பொறுப்புக்குரியவர்கள் ஆவர். நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் உரிய பாதுகாப்பு அமைவுகளை எழுத்தில் வைத்திருந்து அதனை ஒழுக வேண்டும். அதனை சரிபார்ப்பது மாநில அரசுகளின் பணியாகும். நாம் நடுவனரசாக தொடர்ந்தும் மாநிலங்களுடன் இதுதொடர்பான தொடர்பாடலைப் பேணுவோம் என்றார்.

இப்போது எட்டப்பட்டிருக்கும் சுவிஸ் அரசின் நடவடிக்கைபோதுமானதா?

சுகாதாரஅமைச்சர் இதற்கு இவ்வாறு பதில் அளித்தார்: நாம் நம்புகின்றோம் எமது இந் நடவடிக்கைகள் தொற்றுத் தொகையினைக் குறைக்கும் என்று. இப்போது நாம் அறிவித்திருக்கும் முகவுறை சரியானசெயலென நம்புகின்றோம். இது நாடுமுழுவதும் அமுல்படுத்தப்படுவதும் சரியான தீர்வாகும். இவ்வழியில் கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்த்து நோய்தொற்றினைக் குறைக்க நடுத்தர வழியினைக் கொண்டுள்ளதாக நம்புகின்றோம் என்றார். பாடசாலைகளில்கட்டாய முகவுறை வருமா பாடசாலைகளில்முகவுறை அணிவது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியது மாநிலங்கள் ஆகும். மாநிலங்கள் தத்தமது இடங்களுக்கு ஏற்ப முடிவுகளை எட்டுவதுஇலகுவானதாகும் என்றார் சுவிஸ் நடுவன் அரசின் சுகாதார அதிகாரி திரு. கெர்பெர். பேர்ன்மாநிலம் 1000 மக்களுக்கு மேலாக ஒன்றுகூடத் தடை விதித்துள்ளது சுவிசின்நடுவனரசு பெருவிழாக்கள் நடாத்துவதற்கு பொதுத்தடை ஏதும் விதிக்கவில்லை.

மாநிலங்கள்சொந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்து சிலமணிநேரத்திற்குள் பேர்ன் மாநிலம் 1000 மக்களுக்கு மேலாக ஒன்றுகூடத் தடையினை அறிவித்துள்ளது. தற்போது மகுடநுண்ணுயிரியான கொறோனா மிக வேகமாகப் பரவிவரும்சூழலில் அதன் விளைவாக மனிதர்கள் பெருமளவில் கூடுவதை தடுக்கும் நடவடிக்கையாக இதனை பேர்ன் மாநிலஅரசு நோக்குவதாகவும் அறிவித்துள்ளது. இதன்பொருள் பெருநிகழ்வுகளில் ஆகக்கூடியது 1000 மக்களே பங்கெடுக்கலாம். விழாநடைபெறும் இடம் இதற்கு அமையபோதிய பரப்பளவுடன் இருக்க வேண்டும். உரியசுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் கைக்கொள்ளப்படவேண்டும் என்பதாகும்.