இலங்கை: நாறுகின்றது காவி அரசியல்

முன்னாள் எம்பி அத்துரலிய ரத்ன தேரர் தனது கட்சியான எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் என்று சொல்லப்படும் வெதினிகம

விமலதிஸ்ஸ தேரரை தடுத்து வைத்திருந்தார் என்று விமலதிஸ்ஸ தேரருக்கு நெருங்கிய தேரர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் காணாமல் போனதாக அவரது கட்சியினரால் கூறப்பட்ட நிலையில் அக்கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை ஞானசார தேரருக்கு வழங்குவது தொடர்பில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் விமலதிஸ்ஸ தேரர் அண்மையில் வெளித்தோன்றினார். இந்நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தன்னை ஞானசார தேரர் கடத்தி சென்று தாக்கினார் என்று எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அரம்பொல ரத்னசார தேரர் மற்றொரு குற்றம்சாட்டை சுமத்தியுள்ளார்.

வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் வசிக்கும் விகாரையில் இருந்த அரம்பேபொல ரத்னசார தேரர், இனந்தெரியாத குழுவினரினால் தாக்கப்பட்டதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகின்ற அரம்பேபொல ரத்னசார தேரரே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

You may have missed