September 9, 2024

அமைதியாக தேரேறிய நல்லூர் முருகன்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்தல் திருவிழா இன்று (17) அமைதியாக இன்று காலை நடைபெறவுள்ளது.

இந்நாளில் தனி மனித இடைவெளியைப் பேணியும் முகக் கவசத்தை அணிந்தும் சுகாதார நடைமுறைகளைத் தவறாது பின்பற்றிக் கொள்ளுமாறு ஆலய தர்மகர்த்தா கேட்டிருந்தார்.

இதனிடையே நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவ தினமான இன்று (17) அதிகாலை முதல் பிற்பகல் 2 மணிவரை சண்முகப் பெருமானை தாராளமாகத் தரிசிக்க முடியும் என மக்கள் குவிவதை தடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

குழந்தைகளையும், வயோதிபர்களையும் ஆலயத்துக்கு அழைத்து வருவதைத் தவிர்க்கவும்; வீட்டிலிருந்தவாறே எம்பெருமானை தியானத்தில் தரிசனம் செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் அதிகாலை வேளையிலேயே சுவாமி வீதி வலம் வருகை தந்திருந்த போதும் ஆயிரணக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.