April 26, 2024

கிழக்கின் புதிய ஆளுனராக கருணா அம்மான்.?? கிழக்கின் திக்திக் நிமிடங்கள்.!!

கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானை நியமிப்பதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள அதே வேளை மைத்திரிபால சிறீசேன தரப்பிலிருந்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை நியமிக்கவும் கூறப்பட்டுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அம்பாறை மாவட்டத்தின் தனித்து களமிறங்கிய முதல் முறையே கருணா அம்மான் 30 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் எடுத்தும் பாரளமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் கருணாவுக்கே ஆளுனர் பதவி வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

 

மேலும் ஹிஸ்புல்லா தொடர்பாக பல்கலைக்கழக சர்ச்சைகளுக்கு பின்னர் 2 முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளமையால் மீண்டும் ஹிஸ்புல்லாவை ஆளுனர் ஆக நியமிப்பது அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது எனவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கருணா அம்மான் – ஹிஸ்புல்லா இருவரும் சுயேற்சையாக களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தின் தேசியப்பட்டியில் ஆசனம் இன்று பல இழுபறிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் கருணாவுக்கு போட்டியாகவும் கருணா அம்மானை பலவாறு விமர்சித்தும் வந்த நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினராக இருந்த கலையரசனுக்கு கூட்டமைப்பு வழங்கியிருக்கின்றது. அதே போல் கிழக்கு மாகாண ஆளுனர் பதவி யாருக்கு என்ற கேள்வி அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குரிய விடயமாக இருப்பதோடு மக்கள் ஆவலோரு எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் என்பதே உண்மை.