April 26, 2024

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த „மர்மம்“ அவிழ்க்கப்பட்டது.!

பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விஷயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14 ஆம் தேதி இறந்த அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) போன்ற ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் இன் மரணம் உலகையே உலுக்கியது என்பது தான் உண்மை. பூமியான ‚எச்சரிக்கை மணி‘ இனி ஒலிக்காது பூமியான ‚எச்சரிக்கை மணி‘ இனி ஒலிக்காது என்பது போன்று இவருடைய மரணம் பார்க்கப்பட்டது. இவரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களுக்கு இந்த தகவலைக் கேட்டதும் வேடிக்கையாக இருக்கலாம், இன்னும் சிலருக்குக் குழப்பமாகக் கூட இருக்கலாம், ஆனால் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்பவர் உண்மையில் அசாதாரணமானவர். பல ஆழமான அர்த்தங்களுடன் கூடிய விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் நிரூபிக்கக்கூடிய கோட்பாடுகளுடன் சமர்ப்பித்தவர் இவர் மட்டும் தான் என்பது மற்றொரு உண்மை. யாருக்கும் தெரியாமல் மர்மமாக இருந்த இறுதி ஆய்வு எது? ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், தனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்தி வந்தார், பல கோட்பாடுகளை நிரூபித்துவந்தார். ஆனால், அவருடைய இறுதி நாட்களில் அவர் எந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் மர்மமாகவே இருந்து வந்தது. யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த மர்மம் வெளியுலகிற்கு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஸ்டீபன் ஹாக்கிங் தனது இறுதி நாட்களில் எந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தார் என்ற உண்மை தற்பொழுது வெளியாகியுள்ளது. இறப்பதற்குச் சரியாக 10 நாட்களுக்கு முன்னர் ஹாக்கிங் செய்தது இதைத் தானா? ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி ஆராய்ச்சிக் கட்டுரையானது, இந்த பிரபஞ்சம், நமது பூமி கிரகத்தைப் போன்றே இருக்கும் பல கிரகங்களைக் கொண்டு இருப்பதாகக் கூறுகிறது. சரியாக ஹாக்கிங் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஜர்னல் ஆப் ஹை-எனர்ஜி பிசிக்ஸ் (Journal of High-Energy Physics) பத்திரிகைக்கு இந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆய்வுக்கட்டுரை பேரலல் யுனிவர்ஸ் (parallel universes) எனப்படும் இணை பிரபஞ்சங்கள் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய உதவும் வழிகளை, விண்வெளி வீரர்களுக்குக் கற்பிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இணை பிரபஞ்சமா.? அப்படி என்றால் என்ன.? அது உண்மை தானா? இணை பிரபஞ்சம் என்றதும் சிலருக்கு இது சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கும், ஆனால் இணை பிரபஞ்சம் இருப்பதற்குச் சாத்தியம் அதிகமுள்ளது என்கிறார் ஹாக்கிங். நாம் இருக்கும் பூமி, அந்த பூமி இருக்கும் சூரியக் குடும்பம், அந்த சூரியக் குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலம், அந்த பால்வெளி மண்டலத்தைச் சுற்றி இருக்கும் இதர பால்வெளி மண்டலங்கள் என எல்லாம் ஒன்று சேர ஒரு பிரபஞ்சம் உருவாகும். அப்படியான பிரபஞ்சம் ஆனது தனியாக இல்லை என்கிறது இவரின் இறுதி ஆய்வு. இணை பிரபஞ்சங்கள் உண்மை என்றால் அங்கு உயிர்கள் இருக்குமா? நாம் இருக்கும் பிரபஞ்சத்தைப் போலவே பல நூற்றுக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கிறது என்கிறார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் . இது அனைத்தும் உண்மை தான் என்று நம்பக்கூடிய கோட்பாடு தான் – பேரலல் யுனிவர்ஸ் அல்லது மல்டிவெர்ஸ் (Multiverse) என்று அழைக்கப்படுகிறது. இணை பிரபஞ்சங்கள் என்பது உண்மை என்றால், அங்கும் உயிர்கள் இருக்குமா? என்கிற ஒரு அடிப்படையான கேள்வி எழுந்திருக்கும். Das originelle Geschenk, 100% personalisierbar. Deejo Börsenexperte verschenkt sein neues Buch. Das wird der Finanz-Industrie… Felix Haupt Diese neue Smartwatch begeistert Menschen in ganz Deutschland. Sie… Technology Insider பிக் பேங்க் (Big Bang) வெடிப்பு ஆம், அங்கும் உயிர்கள் நிச்சயமாக இருக்க வாய்ப்புள்ளது அல்லது சுத்தமாக இல்லாமல் கூடப் போவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த இரட்டை பதில் பின்னால் முக்கிய காரணமாக பிக் பேங்க் (Big Bang) வெடிப்பு இருக்கிறது. பிக் பேங் வெடிப்பில் சிதறிய அனைத்து பிரபஞ்சங்களிலும் அணு உற்பத்தி ஆகியிருக்கும் என்று உறுதியாக நம்மால் இப்பொழுது கூற முடியாது. நம்மைப் போன்றதொரு அறிவார்ந்த உயிரினம் இருக்க வாய்ப்புள்ளதா? உயிர்கள் தோன்ற அணு உற்பத்தி அவசியம் என்ற கருத்தில், இணை பிரபஞ்சத்தில் அணு உற்பத்தி ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று இப்பொழுது பார்க்கலாம். அணு இல்லையேல் மூலக்கூறுகள் இல்லை என்பதே உண்மை. மூலக்கூறுகள் இல்லாமல் நட்சத்திரங்கள் உருவாகி இருக்க முடியாது. நட்சத்திரங்கள் இல்லை என்றால் கண்டிப்பாகக் கிரகங்கள் உருவாகி இருக்க வாய்ப்பில்லை. கிரகங்கள் இல்லை என்றால் கண்டிப்பாக உயிர்கள் உருவாகி இருக்காது. ஆனால், இவை அனைத்தும் படிப்படியாக வேறு ஒரு பிரபஞ்சத்தில் உருவாகி இருந்தால், நிச்சயமாக அங்கு உயிர்களும் உருவாகி இருக்க வாய்ப்புள்ளது தானே. செமையான எடுத்துக்காட்டு இதுவாக தான் இருக்கும் பூமியும் இப்படி தானே படிப்படியாக உருவாக்கியது. அதை யாரும் மறுக்க முடியாது அல்லவா? அதைப் போன்று தான் நிச்சயமாக இணை பிரபஞ்சத்தையும் யாராலும் இல்லை என்று அடித்து மறுத்துவிட முடியாது. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உள்ளது கடலிலிருந்து ஒரு கரண்டி தண்ணீரை எடுத்துப் பார்த்து, அதில் திமிங்கிலம் இல்லை, சுறா மீன் இல்லை என்று கூறுவது உண்மையாகிவிடாது. இணை பிரபஞ்சம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது உண்மையாகிவிடாது. கடலின் ஆழத்தில் இன்னும் நமக்குத் தெரியாத பல மர்மங்கள் ஒளிந்திருக்கத் தான் செய்கிறது. அப்படி தான் பிரபஞ்சமும், நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இருக்கவே இருக்காது என்று முடிவு செய்துவிட முடியாது. நிச்சயமாக இணை பிரபஞ்சம் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தான் பலரும் நம்புகின்றனர். நம்மை மிஞ்சிய உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளதா? அப்படி இணை பிரபஞ்சங்கள் இருந்தால் அங்கும் உயிரினங்கள் இருந்தால் அவையும் நம்மைப் போன்றதொரு அறிவார்ந்த உயிரினமாக இருக்குமா.? அல்லது நம்மை மிஞ்சிய உயிரினமாக இருக்க கூடுமா என்ற கேள்விக்கான பதிலைத் தேடித் தான் ஸ்டீபன் ஹாக்கிங் இன் அடுத்த ஆராய்ச்சி சென்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம், இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை, 1980 களில் ஹாக்கிங் தேட தொடங்கிவிட்டார் என்பதே உண்மை. அவருக்குத் துணையாக அமெரிக்க இயற்பியலாளர் ஆன ஜேம்ஸ் ஹார்டில் பணியாற்றினார். வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது? இந்த கூட்டணி, பிரபஞ்சத்தின் தொடக்கத்தைப் பற்றி ஒரு புதிய கருத்தை உருவாக்கியது. அது, பிரபஞ்சம் ஆனது சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்கிற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிலிருந்த சிரமங்களை மட்டும் குழப்பங்களைத் தீர்த்தது. ஹார்டில் – ஹாக்கிங் கூட்டணி ஹார்டில் – ஹாக்கிங் கூட்டணியானது, குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற ஒரு கோட்பாட்டைப் பயன்படுத்தி, எதுவுமே இல்லாத ஒரு வெற்றிடத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைத் தெளிவாக விளக்கியது. அந்த புதிய விளக்கத்தைப் பகுப்பாய்வு செய்தபோது, ​​பிக் பேங் எனும் பெருவெடிப்பானது ஒரே ஒரு பிரபஞ்சத்தை மட்டும் உருவாக்கி இருக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது. இந்த இரண்டு நம்பிக்கையில் எது உண்மை? இந்த கோட்பாட்டின் படி, நமது சொந்த பிரபஞ்சத்தைப் போலவே மற்றொரு பிரபஞ்சம் இருக்கும் என்று சிலர் நம்ப, மறுகையில் உள்ள சிலர், மற்ற பிரபஞ்சங்கள் நம்மை விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கருத்துக்களை வெளியிடத் துவங்கினர். கடைசி நாளை கடந்து விட்ட ஹாக்கிங் இணை பிரபஞ்சங்கள் மீதான நம்பிக்கையை விதைத்த ஹாக்கிங், அது நம்மை போன்றே இருக்குமா.? அல்லது விசித்திரமாக இருக்குமா.? என்கிற இரண்டு நம்பிக்கையில் எது உண்மை என்பதைக் கண்டறியாமலேயே தனது கடைசி நாளை கடந்து விட்டார் என்பது பல அறிவியல் ஆர்வலர்களின் வேதனையாக இருக்கிறது.