April 26, 2024

நாட்டை மீட்டெடுக்க மக்களுக்கு உதவ கனடா வழங்கும் பெரும் தொகை!

கனடாவின் மத்திய அரசு 13 மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கான செலவுகளைச் செலுத்த 19 பில்லியனுக்கும் அதிகமான கனடியன் டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

பல மாத கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் வியாழக்கிழமை பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த மாதம் 14 பில்லியன் கனடியன் டொல்ர் உறுதி அளித்தபோது, ​​மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் ‘பாதுகாப்பான மறுதொடக்கம் ஒப்பந்தத்தை’ எட்ட விரும்புவதாக மத்திய அரசு முதலில் அறிவித்தது, அன்றிலிருந்து பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரவிருக்கும் ஆறு முதல் எட்டு மாதங்களில் அசாதாரண செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இந்த பணம் உதவும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

கொரோனாவின் இரண்டாவது அலைக்கு தயாராக இருப்பது உட்பட கனேடியர்களுக்கு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை கருத்தில் கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

அந்த விஷயங்களில் தொடர்புத் தடமறிதல், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், கொரோனாவுக்கு எதிராக போராடும் நகராட்சிகளுக்கு போக்குவரத்து செலவுகளைச் செலுத்த உதவுதல், உள்ளூர் போக்குவரத்து ஊழியர்களுக்கு உதவுதல், தினப்பராமரிப்புக்கு பாதுகாப்பான இடங்கள் மற்றும் முதியோருக்கான நீண்டகால பராமரிப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

கொரோனா என்பது சுகாதார நெருக்கடி அல்ல, இது ஒரு பொருளாதார நெருக்கடி என்று ட்ரூடோ கூறினார். ஏனென்றால் நாங்கள் ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் வரை, கொரோனாவின் தினசரி அச்சுறுத்தல் மறைந்துவிடாது என குறிப்பிட்டார்.