April 27, 2024

தோல்வி பயத்தால் சுமந்திரனின் புதிய நாடகம்!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் மக்கள் ஆதரவுத்தளம் குறைந்து வருவதை அவதானித்த சுமந்திரன் அதனை சரி செய்வதற்கும் மக்கள் மத்தியில் அனுதாபத்தை தேடிக் கொள்வதற்கும் தனக்கு உயிர் அச்சுறுத்தல் எனும் புதுக் கதையை உருவாக்கி அதனுடாக அனுதாபத்தைத் தேட முயற்சிக்கும் பரிதாப நிலை தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ளமை வியப்பாக உள்ளதாக கூறும் தமிழரசுக் கட்சியில் மூத்த நிருவாகி வெகு விரைவில் மக்கள் வாக்குச் சீட்டுக்களால் தக்க பாடம் புகட்டி இதே பாதுகாப்புடன் கொழும்பில் வாழ்வதற்கு ஓய்வெடுக்க அனுப்புவர் என குறிப்பிட்டுள்ளார்…

அது மட்டமல்லாது பல இளைஞர்களை கைது செய்ய சுமந்திரன் திட்டமிட்டுள்ளதுடன் அதனால் சுமந்திரன் புனைந்துள்ள கதையே இந்த பாதுகாப்பு கதை என கூறியுள்ளார்..

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது…

சுமந்திரன் மீது தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற இருந்ததாகவும் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுமந்திரனுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டநிலையில் தற்போதைய அரசாங்கத்திலும் அது வழங்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்ற நிலையில் பல கட்சிகளும் இதில் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாகவும் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்து்ம் இருப்பதாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கைக்கு அமையவும் சுமந்திரனின் அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழமையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் ஆறு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுட்டு வந்தனர்.

இந்தநிலையில் தற்போது அற்கு மேலதிகமாக பத்து விசேட அதிரடிப்படையினர் அவரின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.