துயர் பகிர்தல் பாலசுந்தரம் சுப்பையா

யாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்க வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா  Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுப்பையா அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாரஞ்சினிதேவி(ரஞ்சி- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயபலன், குணபாலன், நேசபாலன், கஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கம்மா(மணி), அன்னபாக்கியம்(மலர்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, நிலுஷி, வரதினி, சிவநந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனயன், ஜெகிஷா, ஜெனுயா, ஷானுஜன், சோபியா, சச்சின், ஆகாஷ், றியா, தீரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

நாட்டின் தற்போதைய அவசரநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே கலந்து கொள்ள முடியும்.

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயா – மகன்

குணா – மகன்

நேசன் – மகன்

கஜி – மகள்

ரஞ்சி