April 22, 2024

சீனாவில் இன்று இறப்பு எதுவும் இல்லை!

இன்று செவ்வாயன்று சீனா கொரோனா வைரஸ் இறப்புகள் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது.

இது குறித்து தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கையில் இன்று 32 பேருக்கு மட்டும் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நேற்று திங்களன்று 39 ஆக இருந்து இன்று குறைவடைந்துள்ளது.

இதுவரை 3,331 க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும், 81,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சீன அரசாங்கம் கூறுகிறது.