März 28, 2023

ஊரடங்கில் துணிகர திருட்டு

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள நான்கு வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ள சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு வேளையில் ஓட்டமாவடி தபால் நிலைய வீதியிலுள்ள சில்லறை வியாபார நிலையம், ஓயில் வியாபார நிலையம் என்பவற்றினை உடைத்து சில்லறை பொருட்கள் மற்றும் ஓயில் வகைகள், பணம் என்பவற்றுடன் வியாபார நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவினை உடைத்து அதன் உதிரிப்பாகங்களையும் திருடிச் சென்றுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.