September 9, 2024

பருத்தித்துறையில் பலியானவருக்கு கொரோனா இல்லை!

மந்திகை வைத்தியசாலையில் உயிரிழந்த பருத்தித்துறை வாசிக்கு காெரோனா தொற்று இல்லை என்பது ஆய்வுகூடப் பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கடந்த பெப்ரவரி 7ம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இன்று (06) அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். குறித்த நபர் வீசிங் நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.