கோத்தாவுக்கு கொரோனா என வதந்தி; ஒருவருக்கு மறியல்!

கொரோனா தொடர்பில் முகநூலில் போலி தகவல் பரப்பிய பெண் ஒருவரை 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் வை.பிரபாகரன் இன்று (6) உத்தரவிட்டுள்ளார்.

களுத்துறை – வாத்துவையில் நேற்று (05) கைது செய்யப்பட்ட குறித்த பெண் (41-வயது) ஒரு நடன கலைஞர் என்பதுடன், அவர் ‚ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது‘ என தகவல் பகிர்ந்தார் என தெரிவந்துள்ளது.

அவர் மீது கணினி குற்றவியல் சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.