யாழில் சோதனை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையூடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15
பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இவ்வாறு மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதுpப்படுது;தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொகோனா சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கான கொரோனா வைரஸ் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.
இதே போன்று சுவிஸ் நாட்டில் இருந்து வந்த மத போதகருடன் தொடர்பில் இருந்தார்கள் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அரியாலை பகுதியில் இருந்த 12 பேருக்கும் கொரோனா தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதணைகளின் போது எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள தாவடியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 18 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துப பரிசோதணை அறிக்கை நேற்று முற்பகல் கிடைத்தடுது.
அந்த அறிக்கையில் பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்தார்.