பிஞ்சு பாலகனுக்கு கொரோனா!

நீர்கொழும்பு – அக்கரப்பனா பகுதியை சேர்ந்த நான்கரை வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குழந்தைக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதேவேளை இன்றைய தினம் 171 ஆவது ஆளாக மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.