யாழில் பரிசோதனை:எவருக்கும் இன்று தொற்றில்லை!

கொரோனா தொற்று தொடர்பிலான பரிசோதனைகள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட 17 பேரில் எவருக்கும் தொற்றில்லையென்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 8பேர் , அரியாலை பூம்புகார் பகுதியை சேர்ந்த 6பேர் மற்றும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவர் என மொத்தம் 17 பேரது மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் எவருக்கும் தோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே அடுத்த ஊரடங்கு தளர்த்தப்படும் போது நெருக்கடியை குறைக்க இடைவெளி நேரத்தை மு.ப 6 – பி.ப 6 மணி வரையாகவும் சமூக இடைவெளி உறுதிசெய்ய பொலிசார், படையினர், உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக்கிய பொருட்கள்,மருந்துகள் கொள்வனவு செய்யும் இடங்களில் காலை 6 மணிக்கே மேற்பார்வை கடமைகளை ஆற்ற தொடங்குவதும் வர்த்தக நிலையங்கள் டோக்கன் வழங்கும் நடைமுறையை கடைபிடிப்பதும் சிறந்தது என ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.