September 11, 2024

உடலின் செல்லுக்குள் கொரோனா நுழைவதை தடுக்கும் தடுப்பூசிகள் தயார்!

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.

சீனாவில் 82,437 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் .

உண்மையில், உலகின் அனைத்து விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸின் மரபணு வரிசையை கருத்தில் கொண்டு அதை அகற்ற ஒரு தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். இதற்கு மாறாக, சீன விஞ்ஞானிகள் முதலில் இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து சீன விஞ்ஞானிகள் வைரஸ் செல்லுக்குள் வருவதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். ஒரு தடுப்பூசி தயாரிக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பது குறிப்பிடதக்கது.

ஆன்டிபாடிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் முறை உலகம் முழுவதும் மிகவும் பழமையானது.

விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் புற்றுநோய், இரத்த நோய், தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களில் தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றனர்.

சீன விஞ்ஞானி ஜாங் லிங்கியின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் இரத்தத்தில் இருக்கும் உயிரணுக்களுக்குள் நுழைவதன் மூலம் மட்டுமே தாக்குகிறது. இதை குறைக்க, சீன விஞ்ஞானிகள் வைரஸை செல்லுக்குள் அனுமதிக்காத வகையில் ஊசியை தயார் செய்துள்ளனர்.

இதன் காரணமாக வைரஸ் உடலில் தொற்றுநோயைப் பரப்பாது, அதன் சிகிச்சை எளிதானது. சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட 20 தடுப்பூசிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தடுப்பூசிகளில் நான்கு கொரோனாவுக்கு எதிராக அற்புதமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.