Oktober 7, 2024

ஈஸ்டர் பயங்கரவாத சூத்திரதாரிகள் இருவர் கைது!

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது ஒருவர்  கொதடுவ பகுதியிலும் மற்றுமொருவர் மட்டக்குளி பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கைது செய்யப்பட்ட சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி வழங்கிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.