Mai 20, 2024

உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது.

வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கு மதத் தலைவர்கள் ஆற்றக்கூடிய பணிகள் பாரியதாக இருக்கும். 

அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய  பொறுப்பாளர்களும் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியதாகவும், அவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்தார்.  

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert