Mai 9, 2024

வீரபுரம் சிங்களவர்க்கு!


வவுனியாவின் வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.

“ஆனால், ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.

“இதேவேளை, எமது மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் அவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலகத்தால் பதில் வழங்கப்பட்டது.

“ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். உண்மையில் வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும்” எனவும் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert