தாம் இலங்கை செல்ல அனுமதிக்குமாறு இந்திய பிரதமருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தாம் இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையாகி தற்போது ஒரு அறையில் கைதி போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி சாந்தன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த முகாமில் ரத்த உறவுகளை மட்டுமே சந்திக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தம்மை போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு இந்தியாவில் எவ்வாறு ரத்த உறவுகள் இருக்க முடியும் எனவும் சாந்தன் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அதனை அடுத்து, சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் இலங்கையை சேர்ந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ரோபர்ட் பயஸ் ஆகிய நால்வரும்

விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert