ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!


தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கு – கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள், சட்டவிரோத குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், தொல்லியல் திணைக்களத்தில் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கடந்த மாதமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது.

இந்த பேச்சுவார்த்தையின்போது, புதிதாக பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாடு வடக்கு- கிழக்கில் நிறுத்தப்படும் உள்ளிட்ட பல உறுதி மொழிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

எனினும், இவ்வாறான பிரச்சினைகள் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே மீண்டும், இன்று மாலை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான பேச்சு வார்த்தை இடம்பெறவுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert