Mai 3, 2024

ஏஜென்சி இல்லாமல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வர இந்திய மதிப்பின் படி 50 000 போதும்..

 

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலானவெளிநாட்டு ஊழியர்கள் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

தனது குடும்ப வறுமையைப் போக்கி தமக்கு விடிவு காலம் பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் தமது தொழிலுக்காக அதிகமாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூர் வருகை தருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் கல்வியில் குறிப்பிட்ட தேர்ச்சி இல்லாதவர்கள் என அனேகமானவர்கள் சிங்கப்பூரில் தமது ஊதியத்திற்காக நீண்ட காலமாக பணிபுரிந்து வருகின்றனர் மேலும் பணிபுரிய விரும்புகின்றனர்.

இவர்கள் தொழில் புரிய பிரதானமாக சிங்கப்பூரையே தெரிவு செய்கின்றனர்.

எனினும் இவர்கள் சிங்கப்பூர் வருவதற்கு பெருந்தொகையான பணத்தினை ஏஜென்சிகளுக்கு செலுத்த வேண்டி உள்ளது அவர்களுக்கு தடையாக உள்ளது.

சிங்கப்பூர் செல்லும் அநேகமானோர் 4 இலட்சம் ரூபாய் செலுத்தி செல்கின்றனர்.
அவ்வாறு செல்பவர்களுக்கு இரண்டு வருடம் ஒப்பந்தம் தான் முதலில் போடப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் குறித்த ஊழியர் ஏஜென்ஸ் மூலம் இன்றி வேறு ஏதும் வழியில் வேலைக்கு செல்லும் நிறுவன முதலாளி மூலம் நேரடியாக செல்ல முடிந்தால் அவருக்கு இந்திய மதிப்பின் படி 50 000 வரையில் மாத்திரமே செலவாகும்.

சுமார் மூன்றரை இலட்சம் வரை மேலதிகமாக ஏஜென்சிக்கு செலுத்தி தொழிலுக்கு செல்ல வேண்டி உள்ளது.

சிங்கபூரில் பணியாற்றும் உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் குறித்த பணிக்கான அனுமதியினை முதலாளியிடம் பெற்று செல்லாம்.

இவ்வளவு தொகை செலுத்தி செல்ல சிலர் தயங்குகின்றனர்.
சிலர் கடன் வாங்கி அந்த தொகையை செலுத்தி செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பலர் கூட உழைப்புக்கு ஏற்ற ஊதியம் எங்களுக்கு கிடைப்பது இல்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தகுந்த சம்பளத்தை வழங்குவதாகவும் சில நிறுவனங்கள் தகுந்த சம்பளத்தை வழங்குவதில்லை என பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தகுந்த சம்பளம் கிடைக்காமல் ஊழியர்கள் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குகின்றனர்.

ஏஜென்ஸ்களுக்க செலுத்திய பணத்தின் கடனைச் செலுத்துவதற்கு குடும்பத்தின் தேவைகளுக்கு மற்றும் தமது தேவைகள் என அனைத்து தேவைகளையும் செய்து முடிப்பதற்கு குறித்த சம்பளப் பணம் போதாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஏஜஸ் இலக்கு செலுத்திய பணத்தை கடனை செலுத்துவது ஒரு வருடத்திற்கு மேலாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது என தெரிவிக்கின்றனர். ஆனால் இது எல்லோருக்கும் கிடையாது சிலர் தகுந்த சம்பளம் வழங்குவதாகவும் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையை சேர்ந்த கட்டுமான ஊழியர் ஒருவர் கூறுகையில் கட்டுமான துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு தூங்க கூட நேரமில்லை என்று தெரிவித்தார்.

சிங்கபூர் கிருமித்தொற்று நிலவரம்

இந்திய கிருமித்தொற்று நிலவரம்

மலேசியா கிருமித்தொற்று நிலவரம்