April 27, 2024

“கொவிட் -19 இன் தோற்றம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்”

“கொவிட் -19 இன் தோற்றம் குறித்து நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உங்கள் நாடு ஒத்துழைக்க வேண்டும். அதுவும், முதற்கட்ட சோதனை முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட சோதனைக்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் சீனாவின் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுளளதாவது:-
“உலகமெங்கும் சுமார் 17 கோடியே 53 இலட்சம் பேரை பாதித்து, 38 இலட்சம் பேரின் இன்னுயிர்களைப் பறித்து, இன்றும் மனித குலத்தை கதிகலங்க வைத்து வருவது கொரோனா வைரஸ்.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக சொல்லப்பட்டது. பின்னர் வூகான் நகர ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உலகை அதிர வைத்தது.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது என்பது தொடர்பாக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.”

இந்நிலையில் உலக சுகாதார அமைப்புத் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ், முதற்கட்ட வைரஸ் பரவல் குறித்த சோதனை முடிந்துவிட்ட நிலையில் உகான் நகரில் இரண்டாம் கட்ட சோதனை நடைபெற உள்ளது என்றும் இதற்கு சீன கம்யூனிச அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.