Mai 7, 2024

இலங்கையின் பேரழிவை மூடி மறைத்த சிங்கள நடிகை!

கொழும்பு கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான X-press pearl கப்பல் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை, இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி தொடர்பில் ஒரு முக்கியமான அறிக்கையை உலகின் முன்னணி பத்திரிகையான எகனாமிஸ்ட், வெளியிட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய தினத்தில் , 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டமையினால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து கூகுள் தேடு பொறி உட்பட சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடப்பட்ட ஒருவராக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கடற்பகுதியில் ஏற்பட்ட பெரும் பாதிப்பு தொடர்பில் இலங்கையர்கள் உட்பட அமைப்புகள் பலவற்றின் கருத்துகளை பியுமி ஹன்சமாலியின் கைது மூடி மறைத்துள்ளதாக economist இன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த இரண்டு வாரங்கள் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் X-press pearl எனும் container கப்பல் பாரிய தீ விபத்துக்கு உள்ளாகி இருந்தது. அதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் முதல்கொண்டு, பிளாஸ்திக் பொருட்கள் மற்றும் வெடிக்கக்கூடிய இரசாயனப்பொருட்கள் மற்றும் nurdles என அழைக்கப்படும் மெல்லிய பிளாஸ்திக் துகள்கள் வரையில் வெடித்து சிதறி நீரில் கலந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து ஜூன் 2ம் திகதி கப்பல் நீரில் மூழ்கியது. Nurdles மற்றும் ஏனைய கழிவுகள் கடற்கரைகளில் ஒதுங்குகின்றன. அதிகூடிய தீவிரம் கொண்டு அமில இரசாயனங்களைக் கொண்ட கப்பல் இலங்கை நீர்ப்பரப்பிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டமை குறித்து தற்போது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக piumi hansamali எனும் 28 வயது இலங்கை model குறித்து அதிகம் மக்கள் பேசியுள்ளனர். காரணம் கப்பல் வெடித்த அதே நாள் piumi மற்றும் பலரை பஸ்ஸில் ஏற்றி போலீசார் passara எனும் ஊரிற்கு இரண்டு வார கட்டாய தனிமைப்படுத்தலிற்காக அனுப்பியுள்ளதாக அதில் செய்தி வெளியிட்டுள்ளமை அனைவரதும் சிந்தனையை தூண்டியுள்ளது.

இதேவேளை, மே மாதம் 30ம் திகதி நடிகை chandimal jayasinghe எனும் அழகுக்கலை நிபுணரது பிறந்தநாளில் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை மீறி கலந்துகொண்டமைக்காக நடிகை  piumi கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.