Mai 10, 2024

ஒபாமாவின் சாதனையை முறியடித்து சாதித்த ஜோ பிடன்!

ஒபாமாவின் சாதனையை முறியடித்து சாதித்த ஜோ பிடன்!

தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 71,505,319 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பிடன் வெற்றியின் அருகில் இருக்கிறார் என்கின்றன தகவல்கள். இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 71,505,319 என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 68,253,028 வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பிடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தெரிவு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.