Mai 10, 2024

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன் தெரிவித்துள்ளார்

சாவகச்சேரி பிரதேசத்தில் தற்போதைய நிலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காத நிலையில் காணப்படுகிறது தற்போது யாழ் குடா நாட்டிலும் தொற்று நிலைமை ஏற்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே

இதற்கு நாங்கள் யாரையும் குறை சொல்லிப் பிரயோசனமில்லை எனவே மக்களாகிய நாம் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் அந்த வகையிலே மக்கள் நிறுவனம் என்ற வகையில் சாவகச்சேரி பிரதேச சபையினராகிய நாம் கொடிகாமத்தில் முக்கியமாக சந்தை பிரதேசத்தில் பல தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்

குறிப்பாக நடைபாதை வியாபாரங்களை தடுத்திருக்கின்றோம் அதேபோல் கொடிகாம பகுதியினை சுத்தப்படுத்தல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்

பிரதேசசபை என்ற ரீதியில் தொற்றினை தடுப்பதற்கான சில முன்னேற்பாடுகள் முன்னெடுத்துள்ளோம் அதேபோல் பொதுமக்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சந்தைப் பகுதிகளிற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

அத்தோடு பொதுமக்களும் குறித்த தோற்று ஏற்படாதவாறான பாதுகாப்பு விழிப்புணர்வுகளை எமது பிரதேச சபை வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தி வருகின்றோம் எனினும் பொதுமக்கள் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்

அத்தோடு கொடிகாமம் பகுதியில் நடைபாதை வியாபாரங்கள் தடைசெய்யப்பட்ருக்கின்றன எனினும் பொதுமக்கள் இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப தொற்றினை தடுப்பதற்கான நடைமுறையினை பின்பற்றிக்கொள்ள வேண்டும்

எனினும் நடைபாதை வியாபாரத்தை பொறுத்தவரை அன்றாட உழைப்பின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் நிலை காணப்படுகின்றது எனினும் தற்போதுள்ள தோற்று நிலைமையினை மக்கள் மத்தியில் ஏற்படாமல் தடுப்பதற்கு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன்காரணமாக சில முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்

அத்தோடு சந்தை மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் பிரதேச சபை ஏனைய தொண்டு அமைப்புக்கள் ஊடாக மேற்கொண்டுள்ளோம் அத்தோடு எதிர்வரும் சனிக்கிழமை மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நாங்கள் விநியோகிக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்..