அரசியல்வாதிகளை எச்சரித்த மஹிந்த

அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

எமது நாடு என்றுமே முகங்கொடுக்காத கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மக்களுக்கு அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், வியாபாரிகள், தனவந்தர்கள், சமூக சேவகர்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

எனினும், சில அரசியல்வாதிகள் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபத்தை தேட முயற்சிக்கின்றனர்.

முழு சமுதாயமும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம். – என்றார்.