Mai 6, 2024

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயை 25 கி.மீ நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்…

பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயை 25 கி.மீ நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...
பிறந்து 3 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தையுடன் தாயினை 25 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை மலை கிராமமான சின்ன கீழ்ப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் ராஜேஸ்வரி தம்பதியினர்.

கடந்த 28 ஆம் தேதி அன்று ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக ராஜேஸ்வரியை அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜமுனாமரத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டு அங்கு கடந்த 29 ஆம் தேதி அன்று ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து நேற்று தாயும் குழந்தையும் நலமாக இருப்பதால் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் கணவர் சிதம்பரத்திடம் மருத்துவர்கள் கூறினர்.


கொரானா வைரஸ் பாதிப்பால் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் தங்கள் ஊருக்கு எந்த ஒரு வாகனமும் செல்லாது என மருத்துவர்களிடம் கூறியதையடுத்து மருத்துவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தங்கள் மனைவியும் குழந்தையும் அழைத்துச் செல்லலாம் என கூறினர்.

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டு அழைக்கப்பட்டது 108 ஆம்புலன்ஸ்க்கு பின்னர் அரசு தாய் சேய் நலம் ஆம்புலன்ஸ் மூலம் தங்கள் மனைவியையும் குழந்தையையும் அழைத்துச் செல்லலாம் என கூறியதையடுத்து தாய் சேய் நலம் ஆம்புலன்ஸ் தொடர்புகொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஜவ்வாது மலை சின்ன கீழ்ப்பட்டு மலை கிராமத்திற்கு அழைத்து வந்த நிலையில் மலையடிவாரத்தில் உள்ள பரமனந்தல் பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இனி அழைத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டு தாயும் பச்சிளம் குழந்தையும் நடு வழியில் கீழே இறக்கிவிட்டனர்.

பின்னர் பின்னர் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு கார் மற்றம் ஆட்டோ உள்ளிட்ட எந்த ஒரு வாகனமும் அழைத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ஓட்டுனரிடம் கெஞ்சியும் ஓட்டுனர் செவிசாய்க்காமல் பச்சிளம் குழந்தையையும் தாயையும் நடுவழியில் இறக்கி வட்டு சென்று விட்டசம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மருத்துவமனையில் இருந்து தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறிவிட்டு நடுவழியில் எங்களை இறக்கி விட்டு சென்றது பெரும் வேதனையாக உள்ளது எனவும் தற்பொழுது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் மலை கிராம பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பச்சிளம் குழந்தையுடன் தாயினை அரசு தாய்-சேய் நல ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மலையடிவாரத்தில் இறக்கி விட்டதால் 25 கிலோமீட்டர் பச்சிளம் குழந்தையுடன் நடந்து சென்ற செய்தி நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பப்பட்டது.

இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் பிரசவமான தாய் மற்றும் குழந்தைகளை வீடுகளுக்கு கொண்டு செல்ல தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.