November 23, 2024

ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் வாங்கும் முடிவில் உறுதியாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானை கடடமைப்பது ஒன்றும் அமெரிக்காவின் குறிக்கோள் அல்ல. பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க ராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறி விட்டதால் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

தலிபான்களை ஒடுக்க ஆப்கன் ராணுவத்திற்கு அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. தலிபான்களுக்கு எதிராக போராடமலே ஆப்கானிஸ்தான் ராணுவம் முழுமையாக சரணடைந்துள்ளது. ஆப்கன் ராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆப்கன் தலைவர்களின் ஒற்றுமையின்மையே தலிபான்களின் வெற்றிக்கு காரணம். ஆப்கானிஸ்தான் தற்போதையை நிலவரத்தை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.