Mai 17, 2024

சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

தேசிய வேட்பாளராக , சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை வரவேற்க முடியும். அவ்வாறான நிலையை நோக்கியதாக எமது அரசியல் இருக்க வேண்டும் என சட்டத்தரணி அ. சுவஸ்திகா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.   

தமிழ் பேசும் மக்களாக நாம் எதிர்ப்பு வாக்குகளையே போட்டு வந்தோம். இந்த முறை தேர்தலில் எமது உரிமைகளை எவ்வாறு வென்று எடுக்க போறோம். தெற்கு அரசியல் வாதிகளுடன் இணைந்து எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டும் 

பொது வேட்பாளர் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்றால் வரவேற்க தக்கது. ஆனால் இந்த தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரால் வெற்றி பெறமுடியாது. வெற்றி பெற முடியாவிட்டாலும் , தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர முடியும். தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தி குறுகிய அரசியலை முன்னெடுத்தால் நாம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினை தேசிய மட்டத்தில் முன்னெடுத்து செல்ல முடியும் 

தேசிய வேட்பாளராக , சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை வரவேற்க முடியும். அவ்வாறான நிலையை நோக்கியதாக எமது அரசியல் இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert