Mai 2, 2024

கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே! நல்வாழ்த்துக்களுடன் வேண்டுகோளும்கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே!

நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளு

கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், பா.உ.
தலைவர், தமிழரசுக் கட்சி
இலங்கைப் பாராளுமன்றம்   

26 January 2024

நல்வாழ்த்துக்களும் வேண்டுகோளும்

அன்புள்ள கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களே!

கடந்த ஞாயிறன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு முதற்கண் எமது நல்வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் (WTSL) அமைப்பின் அங்கத்தினர் உலகம் முழுவதும் பரவலாக வாழ்கின்றனர். இவர்களது முக்கிய நோக்கம் இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், முடிந்தளவு அவர்களின் குறைகளைக் களைவதுமாகும். நிலைமைகள் மோசமடைவதற்கு முன்னர் குறைந்தபட்சம் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் குறிப்பிட்டவாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுடன் இயங்கும் மாகாண சபைகளுக்கு அழுத்தம் கொடுத்தலை எமது பிரதான பணியாகக் கொண்டு இயங்கிவருகிறோம்.


தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில்  இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான ஓர் அரசியல் தீர்வை தரக்கூடிய ஒரு சிங்களத் தலைவருடன் உங்கள் கட்சி இணைந்து செயற்பட தயாராக இருக்கும் என்று சமீபத்தில் நீங்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த நிலை விரைவில் ஏற்படவேண்டும் என நாமும் விரும்புகிறோம். அது சமஷ்டியாகவோ வேறெந்த வடிவமாகவோ இருக்கலாம்.

ஆயினும் அதுவரைக்கும் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13ஆம் திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென அழுத்தம் கொடுப்பது விவேகமானதும், இதனால் வடகிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு நன்மையே அன்றித் தீமையேதும் இல்லை என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

1949ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்து, சாத்வீகப் போராட்டங்களிலும் இறங்கிய பாரம்பரிய அரசியல் கட்சி என்றவகையில், ஏனைய கட்சிகளுக்கும் இதுவிடயத்தில் அறிவூட்டி, அவர்களையும் சேர்த்து அணைத்துக்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாடுகளையும் கருத்தில்கொண்டு, புதியதோர் கூட்டுப் பயணத்துக்கு தலைமையளிக்க உங்களால் முடியும் என நாம் நம்புகிறோம்.    

கடந்த 40 ஆண்டுகளாக பழக்கப்பட்டுவிட்ட உணர்ச்சியூட்டும் சொற்பதங்களில் என்றும் மூழ்கிவிடாமல், தேர்தல் அரசியலில் மட்டும் கவனம் செலுத்தாமல், தென்பகுதி மக்களின் உணர்வுகளையும் அரசியல்  மாற்றங்களையும் மனதில்கொண்டு, முற்போக்கு கட்சிகளுடனும் கலந்துரையாடி, ஓர் தெளிவான தீர்க்கமான பயணத்தை மேற்கொள்ள 

உங்களால் முடியும். அதற்கான தக்க தருணமும் இதுவே. இதைத் தவறவிடாது கைப்பற்றிக்கொள்வீர்கள் எனவும், மாற்றங்களை எதிர்பார்த்திருக்கும் நம் மக்களின் மனதில் சில பயனுள்ள புதிய சிந்தனைகளை விதைத்து, துணிந்து நின்று, யதார்த்த அரசியலில் வெற்றிமீது வெற்றி காண்பீர்கள் என நம்பி வாழ்த்துகிறோம்.  

தாய்மண்ணிலிருந்து இளைஞர்கள் நாள்தோறும் வெளியேறுவதையும், படிப்படியாக நம்மண் பறிபோவதையும் நன்கறிந்தவராக, இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் மெய்யரசியல் (realpolitik)  நிலைப்பாடுகளைக் கருத்திலெடுத்து, மாகாணசபைத் தேர்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான குறுகியகாலக் கொள்கைகளுக்கு முதலிடமும் வழிகாட்டலும் அளிக்குமாறும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். 

நன்றி. 

அன்புடன்

ராஜ் சிவநாதன்WTSL (சர்வதேச ஒருங்கிணைப்பாளர்), Melbourne
wtsl@myyahoo.com           

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert