Mai 17, 2024

மயிலத்தமடு:இனி பொறுத்திருக்கமுடியாது!

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடைப் பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்காக முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் 100வது நாளை எட்டவுள்ள நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமது மேய்ச்சல் தரை மீட்பு போராட்டம் நூறு நாட்கள் அண்மித்துள்ள நிலையில் தமது கோரிக்கைக்கான நியாயமான தீர்வுகள் எதுவும் இதுவரையில் வழங்கப்படாத நிலையே காணப்படுவதாக மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் கமநல அமைப்பின் தலைவர் சீ.நிமலன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பல தடவைகள் தமது கோரிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ள நிலையிலும் இதுவரையில் ஒரு கடிதத்திற்கு கூட பதில் வழங்கப்படவில்லையெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமது கால்நடைகள் மேய்க்கும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதனால் தாங்கள் நடுவீதியில் நூறு நாட்களாக போராடிவரும் தமது கோரிக்கைகளுக்கு அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ கவனத்தில் கொள்ளாத நிலையே இருந்துவருவதனால் எதிர்வரும் சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள்,அரசியல்வாதிகள்,பொது அமைப்புகள்,விவசாய அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,மதத்தலைவர்கள் என அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே சிங்கள குடியேற்றவாசிகளால் தமிழர்களிற்கு சொந்தமான கால்நடைகள் தொடர்ந்தும் கொல்லப்படுவது தொடர்கின்றது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert