Mai 4, 2024

ஜனாதிபதி வேட்பாளர்:முடிவில்லையென்கிறார் ரணில்!

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள போதிலும், இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதில் தனது கவனத்தை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து தாம் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert