Mai 20, 2024

புதைகுழிக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையினை எதிர்வரும் ஓகஸ்ட்10 ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டு அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10 ஆம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.

இதனிடையே தொல்பொருள் திணைக்களம் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் எதிர்வரும் 10 ஆம் திகதி நேரில் பார்வையிட்டு பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert