Mai 4, 2024

உடனே நாடாளுமன்றைக் கலைப்பததே நல்லது – சுமா

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான முறைமையை மீறியுள்ளது.

இதனால் பாராளுமன்றத்தை காலம் தாழ்த்தாது கலைப்பதே சிறந்தது. இவற்றைச் செய்வதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் பல மில்லியன் டொலர்களை நாடு இழக்க நேரிடுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை மற்றும் குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இந்த பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு முறையும் மக்கள் எதிர்பார்ப்புகளுடன் பார்க்கின்றனர்.

பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைகின்றனர்.

இந்த பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதன்போது ஜனாதிபதியின் அதிகாரங்களை பலப்படுத்த 20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தனர்.

சுபீட்சமான நோக்கு என்று தேர்தல் விஞ்ஞாபனத்தை கொண்டு வந்திருந்தார்கள். அதனை நாடு இருக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி விசேட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதில் வருமான வரி, பெறுமதி சேர் வரி, தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்று பல்வேறு வரிகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, இந்த முன்மொழிவுகளை அமுல்படுத்தினால் இலங்கை லெபனான் போன்று நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று கூறியிருந்தார். அவரின் எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert