April 26, 2024

அடுத்த ஆளுநர்:மோதல் உச்சம்

இலங்கையின் மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் தொடர்பில் கோத்தா-ரணிலிடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.

 இலங்கை  மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இதன் பின்னர் ஜனாதிபதி புதிய மத்திய வங்கி ஆளுநரை நியமிக்க வேண்டும் அல்லது தற்போதைய ஆளுநரின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும்.

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கு நிதி அமைச்சரின் எழுத்துப்பூர்வ பரிந்துரையை ஜனாதிபதி பெற்றுக் கொள்ள வேண்டும், அதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும்.

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் ஆறு வருடங்கள் என்பதுடன், 2016ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமியின் பதவிக் காலத்தின் இறுதி மாதத்தை தற்போதைய ஆளுநர் கழித்துள்ளார்.

குமாரசுவாமி தனது பதவிக்காலம் முடிவடையாமல் இராஜினாமா செய்த பிறகு, டபிள்யூ.டி. லக்ஷ்மண் மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் மத்திய வங்கியின் ஆளுநர்களாக எஞ்சியிருந்த காலப்பகுதியில் பணியாற்றியுள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert