Mai 19, 2024

எவர் கிரீன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுள் ஒன்றான எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எவர் ஏஸ் கப்பல் நேற்றிரவு 11.04 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கப்பல் போக்குவரத்து தொடர்பான இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 400 மீற்றர் நீளமும் (1,300 அடி) 62 மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 23,992 கொள்கலன்களைக் கொண்டுள்ளது.

இந்தக் கப்பல் எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமானதுடன் கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாளும் நடவடிக்கைக்கு இணைக்கப்பட்டது.

கடந்த மாதம் நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதேவேளை, தெற்காசியாவில் இவ்வாறு மிகப்பெரிய கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்கள் நங்கூரமிடக்கூடிய வசதியுடைய துறைமுகங்கள் உலகிலேயே 24 உள்ளன.