மட்டக்களப்பில் களமிறங்கும் மன்னாரு சுமந்திரன்?

அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலினை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எதிர்கொள்ள எம்.ஏ.சுமந்திரன் தயாராகிவருவதாக மாவை தரப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் ஒருவாறாக உள்நுழைந்து கொண்டுள்ள எம்.ஏ.சுமந்திரன் அடுத்து தேர்தலை கிழக்கில் இரா.சாணக்கியனை முன்னிறுத்தி எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மாவை தரப்பு சந்தேகிக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக தமிழரசு ஆட்சியை கிழக்கு பிரதேச வாதத்தை முன்னிறுத்தி கைப்பற்ற முயல்வதாக மாவை குற்றஞ்சாட்டி பேட்டியளித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

இதனிடையே கிழக்கில் தமிழ் அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களை  நானும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்களும் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம். இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர என இரா.சாணக்கியன் தகவல் வெளியிட்டுள்ளார்.

You may have missed