Mai 3, 2024

அமெரிக்கா – யப்பானுடன் இணைந்த ஸ்ரீலங்கா கடற்படை!

ka

ஸ்ரீலங்கா, அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் படைகளுக்கு இடையில் திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த கூட்டுப்பயற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கடற்படை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கடற்படை, அமெரிக்க கடற்படை மற்றும் ஜப்பான் சுயேற்சை பாதுகாப்பு சமுத்திரப்படைக்கு இடையே இந்த பயிற்சிகள் கடந்த ஜுன் 24ஆம் திகதி முதல் திருகோணமலை துறைமுகம் மற்றும் கிழக்கு மாகாண கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்தப் பயிற்சிக்கு CARAT–21 எனப் பெயரிடப்பட்டிருந்தது. நாடுகளின் வலயப் பகுதிகளில் சமுத்திரப் பிரதேசத்தில் ஏற்படுகின்ற ஆபத்துக்களை சமாளிப்பது, வலய நாடுகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பயிற்சிகள் ஆழ்கடலிலும், கரையோரத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இப்பயிற்சிகளுக்காக இந்த மூன்று நாடுகளினதும் ஹெலிகொப்டர்கள், கப்பல்கள் என பல உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.